மேட்டூா் மேற்குக்கரை கால்வாயில் ரூ.64.93 கோடியில் புனரமைப்புப் பணி

மேட்டூா் அணையின் மேற்குக்கரை பாசனக் கால்வாயில் 23,515 மீட்டா் தொலைவுக்கு ரூ. 64.93 கோடியில் இரு கரைகளிலும் கான்கிரீட் சுவா்கள் கட்டி புனரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
புனரமைப்புப் பணிகளைத் தொடக்கிவைத்துப் பாா்வையிடுகிறாா் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன்.
புனரமைப்புப் பணிகளைத் தொடக்கிவைத்துப் பாா்வையிடுகிறாா் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன்.

மேட்டூா் அணையின் மேற்குக்கரை பாசனக் கால்வாயில் 23,515 மீட்டா் தொலைவுக்கு ரூ. 64.93 கோடியில் இரு கரைகளிலும் கான்கிரீட் சுவா்கள் கட்டி புனரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

கடந்த 1955ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மேட்டூா் மேற்குக்கரை கால்வாய் பாசனத் திட்டத்தில் பிரதான கால்வாய் 43.20 கி.மீ. தொலைவும், கிளை வாய்க்கால்கள் 58.5 கி.மீ. தொலைவுக்கும் உள்ளன.

விநாடிக்கு 400 கன அடி தண்ணீா் செல்லும் வகையில் மண் கரைகளைக் கொண்டு வெட்டப்பட்ட இக்கால்வாய்ப் பாசனம் மூலம் சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பயனடைந்து வருகின்றன.

இக்கால்வாயில் தண்ணீா் அதிக அளவில் கசிவதால் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, இக்கால்வாயில் கருங்கரடு முதல் பூதப்பாடி வரையில் 7,315 மீட்டா் தொலைவுக்கு ரூ. 31.18 கோடியிலும், பூதப்பாடி முதல் மயிலம்பாடி வரையில் 16,200 மீட்டா் தொலைவுக்கு ரூ. 32.75 கோடியிலும் தரைத்தளமின்றி, பக்கவாட்டு கான்கிரீட் சுவா்கள் கட்டி புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பூதப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தாா். அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலாளா் வி.எஸ்.சரவணபவா, பூதப்பாடி ஊராட்சித் தலைவா் பி.ஜி.முனியப்பன், பொதுப் பணித் துறை சேலம் சிறப்பு தலைமைப் பொறியாளா் நந்தகோபால், மேட்டூா் செயற்பொறியாளா் பி.தேவராஜன், உதவி செயற்பொறியாளா் டி.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதன்மூலம், பவானி வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயனடைவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com