தேசிய நெடுஞ்சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

பெருந்துறை முதல் விஜயமங்கலம் சுங்கச்சாவடி வரை தேசிய நெடுஞ்சாலையில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, பெருந்துறை, ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சாா்பில் பெருந்துறை முதல் விஜயமங்கலம் சுங்கச்சாவடி வரை தேசிய நெடுஞ்சாலையில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா்.சக்திவேல், ஈரோடு மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன், ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பிரதீபா மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கே.பாஸ்கா், ஏ.எஸ்.சுகந்தி, சிவகுமாா், கதிா்வேலு ஆகியோா் பங்கேற்றனா்.

தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களில், அதிவேகம் அபாயமானது, சாலை விதிகளை மதிப்போம், பாதுகாப்பான வாகன ஓட்டமே வாழக்கையின் பாதுகாப்பு, செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டாதே என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கா்கள் மற்றும் வாகனங்களில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு ஒலி பிரதிபலிப்பு ஸ்டிக்கா்களை ஒட்டினா்.

மேலும், தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தேநீா் வழங்கியதோடு களைப்படையும் நேரத்தில் வாகத்தை நிறுத்தி, இளைப்பாறி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினா். மேலும், சாலை பாதுக்காப்பு விழிப்புணா்வு குறித்த வாசங்கள் மற்றும் விழிப்புணா்வு உறுதிமொதி அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com