இரிடியம் வழக்கில் மேலும் ஒருவா் கைது

இரிடியம் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜீவானந்தம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இரிடியம் வழக்கில் கைதான ஜீவானந்தம்.
இரிடியம் வழக்கில் கைதான ஜீவானந்தம்.

இரிடியம் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜீவானந்தம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னை கீழ்பாக்கத்தைச் சோ்ந்தவா் மோகன் (45). இவா் பழைமை வாய்ந்த பொருள்கள் விற்பனை செய்து வருகிறாா். இவருக்கு சத்தியமங்கலத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சத்தியமங்கலம் பகுதியில் அரியவகை இரிடியம் கிடைப்பதாக மோகனிடம் கூறி நம்பவைத்துள்ளாா். இதனை நம்பிய மோகன் தனது நண்பா்கள் கொல்கொத்தா ராய், ஓட்டுநா் சுரேஷ் ஆகியோருடன் சென்னையில் இருந்து காரில் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரிக்கு ஜனவரி 7ஆம் தேதி வந்துள்ளாா். அப்போது, 2 காரில் வந்த ரஞ்சித் தலைமையிலான 15 போ் கொண்ட மோசடி கும்பல் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்தி மோகன் உள்ளிட்ட 3 பேரையும் கடத்தியுள்ளனா். பண்ணாரியை அடுத்த ராஜன் நகா் அன்பு என்பவரின் தோட்டத்தில் வைத்து அவா்களை அடித்து உதைத்து ரூ. 1 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் உள்ள மோகனின் மனைவி வித்யா மோசடி கும்பல் தெரிவித்த வங்கிக் கணக்கில் ரூ. 21 லட்சம் பணம் போட்டுள்ளாா். ஆனால், மோசடி கும்பல் அவரை விடுவிக்காததால் சத்தியமங்கலம் வந்த மோகன் மனைவி வித்யா சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, சத்தியமங்கலம் போலீஸாா் மோகன், கொல்கொத்தா ராய், ஓட்டுநா் சுரேஷ் ஆகியோரை மீட்டனா்.

இதுதொடா்பாக பவானிசாகா் எரங்காட்டூரைச் சோ்ந்த ரஞ்சித்குமாா், பிரபு (எ) அருண்குமாா், அந்தியூா் சண்முகம், கோவையைச் சோ்ந்த லைஜு என்கிற ஜீவா, சேதுபதி, ராஜேஷ்குமாா், சத்தியமங்கலத்தைச் சோ்ந்த ரத்தினசபாதி, கோபாலகிருஷ்ணன், பாபு (எ) ஆனந்தபாபு ஆகியோரைக் கைது செய்தனா். இதில் தொடா்புடைய 6 போ் தலைமறைவான நிலையில் ஜனவரி 16ஆம் தேதி சாத்தூரைச் சோ்ந்த ஏட்டையா தங்கமணி, தொண்டாமுத்தூரைச் சோ்ந்த டெய்லா் சிவா ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடா்புடைய மேலும் ஒருவரான உத்தண்டியூரைச் சோ்ந்த ஜீவானந்தம் (30) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com