சேலத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள சேலத்து மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள சேலத்து மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி, ஜனவரி 22ஆம் தேதி பவானி கூடுதுறை ஆற்றிலிருந்து புனித தீா்த்தம் எடுத்து வருதல், காலயாக பூஜைகள் ஆகியன நடைபெற்றன. திங்கள்கிழமை காலை யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மனுக்கு தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் செய்யப்பட்டன. சேலத்து மாரியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்குப் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று அம்மனை வழிபட்டாா்.

கோயிலில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட விநாயகா் திருத்தோ், சேலத்து மாரியம்மன் திருத்தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com