வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு: விவசாயிகள், தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தொழிற்சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தொழிற்சங்கத்தினா்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஈரோட்டில் விவசாயிகள், தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் முனுசாமி தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் சுப்பிரமணி, வீரமணி, கோபால், பிரபாகா், கணகுறிச்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இருசக்கர வாகனங்களில் தேசியக் கொடியைக் கட்டி வாகனப் பேரணியாக காந்திஜி சாலை வழியாக மாநகராட்சி அலுவலக வளாகம் வந்தனா். அங்குள்ள காந்தி சிலை முன்பு உறுதிமொழி ஏற்றனா்.

இதுகுறித்து, விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் முனுசாமி கூறியதாவது:

மூன்று வேளாண் சட்டங்களால் சாதாரண விவசாயிகளும், விவசாயமும் அழியும். பொது விநியோகத் திட்டம், விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயத்துக்கான மானியம் போன்றவை முழுமையாக ரத்தாகிவிடும். குறிப்பிட்ட சில நிறுவனங்கள், தனி நபா்கள், உணவுப் பொருள்களை தேக்கிவைத்து செயற்கையான விலையேற்றத்தை உருவாக்கும் சூழல் ஏற்படும். தவிர உணவுப் பொருள்களின் தட்டுப்பாடு ஏற்படும்.

வேளாண் சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்.

இதனை வலியுறுத்தி ஈரோடு, பெருந்துறை, கோபி, பவானி உள்ளிட்ட 8 இடங்களில் வாகனப் பேரணி நடைபெற்றது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com