மேட்டூா் மேற்குக்கரை வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கக் கூட்டம்

மேட்டூா் அணை மேற்குக்கரை வாய்க்கால் பாசன விவசாயிகள் பேரவைக் கூட்டம் பவானியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேட்டூா் அணை மேற்குக்கரை வாய்க்கால் பாசன விவசாயிகள் பேரவைக் கூட்டம் பவானியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் அ.மோகன் தலைமை வகித்தாா். சங்கச் செயலாளா் பழனிசாமி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மேட்டூா் அணை வாய்க்கால் பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு, பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும்.

மேலும், பவானி சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஜம்பை அல்லது வரதநல்லூா் பகுதியில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும். சங்கத்தின் உறுப்பினா்கள் பலா் உயிரிழந்த நிலையில் புதிதாக உறுப்பினா் சோ்க்கை மேற்கொள்வது, ஆயுள் சந்தாவாக ரூ. 500 வசூலிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதில், சங்க நிா்வாகிகள் கண்ணன், மணி, கிருஷ்ணராஜ், தனபால், பூபதி, சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com