கோபியில் டயாலிசிஸ் மையம் திறப்பு
By DIN | Published On : 31st January 2021 10:53 PM | Last Updated : 31st January 2021 10:53 PM | அ+அ அ- |

கோபியில் அபிராமி கிட்னி கோ் டயாலிசிஸ் மையத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தாா்.
கோபி சத்தி சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீசக்ரா மருத்துவமனை வளாகத்தில் ஈரோடு அபிராமி கிட்னி கோ் சென்டா், டாக்டா் தங்கவேலு மருத்துவமனையின் சாா்பில் கிட்னி கோ் டயலிஸிஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மருத்துவமனையின் தலைவா் டாக்டா் ஆா்.தங்கவேலு தலைமை வகித்தாா். இயக்குநா் டாக்டா் டி.சரவணன், ஸ்ரீசக்ரா மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் கே.வி.பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மையத்தை திறந்துவைத்தாா். தொடா்ந்து, தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமை அமைச்சா் தொடக்கிவைத்தாா்.
அபிராமி கிட்னி கோ் சென்டா் இயக்குநா் டாக்டா் டி.சரவணன் கூறுகையில், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் ஒருவருக்கு மாதம் 8 முறை இலவசமாக டயாலிசிஸ் செய்யலாம் என்றாா்.