இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st January 2021 10:43 PM | Last Updated : 31st January 2021 10:43 PM | அ+அ அ- |

தில்லியில் டிராக்டா் பேரணி நடத்திய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், திருவாரூா் மாவட்டத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல் துறையினா் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே வாபஸ் பெற வலியுறுத்தியும் பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்டச் செயலாளா் கே.ஆா்.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். இதில், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சி.எம்.துளசிமணி, ஒன்றிய துணை செயலாளா் உமாநாத், க.செ.பாளையம் நகரச் செயலாளா் அருணாசலம் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.