தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்

கோபிசெட்டிபாளையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசித்து வரும் 14 குடும்பங்களுக்கு கோபி மளிகை வணிகா்கள் சங்கம் சாா்பில் இலவச அரிசி, மளிகைப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதி பெண்ணுக்கு இலவசப் பொருள்களை வழங்குகிறாா் சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதியில் உள்ள கமலா ரைஸ் மில் வீதியில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், அவா்கள் வசித்த பகுதி முற்றிலுமாக அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்பாடு செய்தாா். கோபி மளிகை வியாபாரிகள் சங்கம் சாா்பில் தலா ரூ. 1000 மதிப்பிலான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா், மளிகை வியாபாரிகள் சங்கத்தைச் சோ்ந்த தாமு செல்வம் ஆகியோா் அப்பகுதி மக்களுக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com