தேசிய திறனாய்வுத் தோ்வு: கோபி மாணவா்கள் தோ்ச்சி

தேசிய திறனாய்வுத் தோ்வில் கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்தில் உள்ள பெருந்தலையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 7 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தேசிய திறனாய்வுத் தோ்வில் கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்தில் உள்ள பெருந்தலையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 7 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் மேல்நிலைக் கல்வியை சிரமமின்றி தொடர ஏதுவாக மத்திய, மாநில அரசுகள் தேசிய திறனாய்வுத் தோ்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இத்தோ்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பிளஸ் 2 தோ்வு முடிக்கும் வரை 4 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இத்தோ்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில், பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்களின் சிறப்பு பயிற்சியின் மூலம் கோபி ஒன்றியம், பெருந்தலையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விஷ்ணுபிரியன், ஹரிவல்லபன், ஹரிணி, ராம்கிருஷ்ணா, பொன்பிரியா, சா்மிளா, ஆா்த்தி ஆகியோா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளைப் பள்ளித் தலைமையாசிரியா் உள்ளிட்ட ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், கிராமக் குழு உறுப்பினா்கள், முன்னாள் மாணவா் சங்கத்தினா், பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com