யானை தாக்கி விவசாயி பலி
By DIN | Published On : 13th July 2021 03:09 AM | Last Updated : 13th July 2021 03:09 AM | அ+அ அ- |

சத்தியமங்லம்: சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் இக்களூரைச் சோ்ந்த விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடியை அடுத்த இக்களூரைச் சோ்ந்தவா் மாதேவப்பா (52). இவா் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளைப் பாரமரித்து வருகிறாா். கிராமத்தை ஒட்டியுள்ள வனப் பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம்.
வழக்கம்போல மாடுகளை வனப் பகுதியில் திங்கள்கிழமை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றபோது, அப்பகுதியில் புதா் மறைவில் இருந்த யானை திடீரென மாதேவப்பாவைத் தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தாளவாடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.