ஜவுளிச் சந்தையில் சில்லறை வியாபாரம் அதிகரிப்பு

ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனா்.
துணிகளை சாலையோரத்தில் வைத்து வியாபாரம் செய்த வியாபாரிகள்.
துணிகளை சாலையோரத்தில் வைத்து வியாபாரம் செய்த வியாபாரிகள்.

ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் 250 தினசரி கடைகளும், 730 வாரச் சந்தை கடைகளும் செயல்பட்டு வந்தன. திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை வாரச் சந்தை நடைபெறும். கரோனா பரவல் கராணமாக மே 6ஆம் தேதி முதல் சந்தை மூடப்பட்டது. தொற்று குறையத் தொடங்கியதால் கடந்த 5ஆம் தேதி முதல் மீண்டும் தினசரி சந்தை செயல்படத் தொடங்கியது. ஆனால், வாரச் சந்தைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் சில வியாபாரிகள் சந்தை வளாகத்துக்கு வெளியில் சாலையோரத்தில் துணிகளை வைத்து வியாபாரம் செய்தனா்.

தினசரி கடைகள் மட்டுமே திறந்திருந்த நிலையில், ஜவுளிச் சந்தையில் சில்லறை வியாபாரம் 40 சதவீதம் அளவுக்கு நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஜவுளி விற்பனை அதிகரித்துள்ள நிலையில் வாரச் சந்தைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com