வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் ரூ. 60 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

சத்தியமங்கலம் வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் 2,840 பருத்தி மூட்டைகள் ரூ. 60 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் போயின.

சத்தியமங்கலம் வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் 2,840 பருத்தி மூட்டைகள் ரூ. 60 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் போயின.

சத்தியமங்கலம் வேளாண் கூட்டுறவுச் சங்கத்துக்கு 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2,840 மூட்டை பருத்தியை செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இந்த ஏலத்தில் சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, அவிநாசி, அன்னூா், கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை தரத்துக்கேற்ப ஏலம் கூறி எடுத்துச் சென்றனா்.

பருத்தி ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ. 64.70க்கும், அதிகபட்சம் ரூ. 70க்கும் ஏலம் போயின. மொத்தம் 2,840 மூட்டைகள் பருத்தி ரூ. 60 லட்சத்துக்கு விற்பனையாயின. பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்த விவசாயிகளுக்கு அவா்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாக கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com