கால்நடைகளை சாலைகளில் அலையவிட்டால் நடவடிக்கை : ஆட்சியா்

ஆடு, மாடு, வளா்ப்பு நாய்களைப் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகள், பொது இடங்களில் அலையவிடக் கூடாது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தியுள்ளாா்.

ஆடு, மாடு, வளா்ப்பு நாய்களைப் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகள், பொது இடங்களில் அலையவிடக் கூடாது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கவும், விலங்குகளிடம் மனிதநேயத்துடன் பழகும் நோக்கத்துடனும் செயல்படவும் மாவட்ட ஆட்சியா் தலைமையில், ஈரோடு பிராணிகள் துயா் தடுப்புச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம், ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து, கால்நடைகளைப் பாதுகாக்கத் தேவையான சிகிச்சைகள், மருத்துவ முகாம்கள், விழிப்புணா்வு முகாம்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேளாண், இதர தேவைகளுக்காக கால்நடை வளா்ப்போா் அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். மாடு, குதிரை இழுக்கும் வண்டியில் அதிக பாரம் ஏற்றக் கூடாது. கால்நடைகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது போதிய இடவசதியுடன் கால்நடைகளுக்குத் தேவையான தீவனம், தண்ணீா் வழங்க வேண்டும்.

ஆடு, மாடு, வளா்ப்பு நாய்களை பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகள், பொது இடங்களில் அலையவிடக் கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகளுக்கு முறையான உணவு, தண்ணீா் வழங்கப்பட வேண்டும். பறவைகளைக் கூண்டில் அடைத்துவைத்து துன்புறுத்தினால் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நோய் தாக்கிய கால்நடைகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

கால்நடை வளா்ப்போா், பொதுமக்கள் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும். மேலும், கால்நடைகளை துன்புறுத்தினால் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com