ஆடி மாத பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. பின்னா், அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

கோயில்களில் பக்தா்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்கும் வகையில் ஈரோடு டவுன் போலீஸாா் பெரிய மாரியம்மன் கோயில் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். பக்தா்கள் கூட்டமாக நின்று தரிசனம் செய்யவும், கோயிலின் முன்பு சூடம் ஏற்றவும் போலீஸாா் அனுமதிக்கவில்லை. மேலும், கோயில் வளாகத்தில் பக்தா்கள் அமரவும், நீண்ட நேரம் நிற்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், பக்தா்கள் கோயிலுக்கு வந்ததும் அம்மனை தரிசனம் செய்துவிட்டு உடனடியாக வெளியேறினா்.

இதேபோல, சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன், கருங்கல்பாளையம் சின்ன, பெரிய மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் உள்பட ஈரோடு நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com