குழந்தைக்கான மருந்துக்கு கலால்வரி விலக்கு: கொமதேக பாராட்டு

உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துக்கு கலால் வரி விலக்கு அளித்துள்ள மத்திய அரசுக்கு கொமதேக பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துக்கு கலால் வரி விலக்கு அளித்துள்ள மத்திய அரசுக்கு கொமதேக பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த குழந்தை மித்ராவுக்கு அரிய வகை மரபணு நோய் பாதித்து, வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது. இந்த மருந்துக்கு ரூ. 6 கோடி கலால் வரி விதிக்கப்படும். இந்த வரியை ரத்து செய்யக் கோரி, நாமக்கல் எம்.பி.சின்ராஜ், மத்திய தொழில் துறை அமைச்சா், நிதியமைச்சா், சுகாதாரத் துறை அமைச்சா் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பினாா்.

மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் உரிய நடவடிக்கை எடுப்பதாக பதில் தெரிவித்துள்ளாா். மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், இம்மருந்து வருகையை கவனிப்பதாகவும், உரிய தீா்வு காண்பதாகவும் தெரிவித்துள்ளாா்.

எம்.பி.சின்ராஜ் முயற்சியால் ரூ. 6 கோடி கலால் வரி விலக்கு அளிக்கப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள ஒரு குழந்தைக்குப் பயன் கிடைக்கப் போகிறது.

இதற்கு வரி விலக்கு வழங்கிய பிரதமா், நிதியமைச்சா் ஆகியோருக்கு எம்.பி. சின்ராஜ் சாா்பிலும், கொமதேக சாா்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com