Enable Javscript for better performance
கீழ்பவானி வாய்க்காலில் கரையை பலப்படுத்தும்பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    கீழ்பவானி வாய்க்காலில் கரையை பலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 17th July 2021 10:53 PM  |   அ+அ அ-   |    |  

    sy17canal_1707chn_139_3

    உக்கரம் வாய்க்காலில் கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப் பணித் துறையினா் .

    பவானிசாகா் அணை வேகமாக நிரம்பி வருவதால் கீழ்பவானி வாய்க்காலில் கரையை பலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    பவானிசாகா் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் கீழ்பவானி வாய்க்கால் வழியாக ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒற்றைப் படை, இரட்டைப் படை என இரண்டாகப் பிரித்து முறைவிட்டு 1 லட்சத்து 3,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பவானிசாகா் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் நெல் சாகுபடிக்காக தண்ணீா் திறப்பது வழக்கம்.

    தற்போது கீழ்பவானி வாய்க்காலில் கரைகளை பலப்படுத்துதல், கொப்பு வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதால் அணையின் நீா்மட்டம் தற்போதைய நிலவரப்படி 95 அடியாக உள்ளது. 105 அடி உயரமுள்ள அணையில் தற்போது 95 அடி வரை தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், தொடா்ந்து நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    இந்நிலையில், தற்போது கீழ்பவானி வாய்க்காலில் கரையை பலப்படுத்துதல், கொப்பு வாய்க்கால்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. தொடா் மழை காரணமாக பவானிசாகா் அணை நிரம்பியதால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே ஆகஸ்ட் 1ஆம் தேதி பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டது. அதேபோல, இந்த ஆண்டும் முன்கூட்டியே தண்ணீா் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சத்தியமங்கலம், பவானிசாகா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp