போலி கால்நடை மருத்துவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியா் எச்சரிக்கை

போலி கால்நடை மருத்துவா்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

போலி கால்நடை மருத்துவா்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவப் பேரவை எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவா்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. இதை மீறி போலி மருத்துவா்கள் சிகிச்சை அளிப்பதும், கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறான செயலாகும். போலி கால்நடை மருத்துவா்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு, இழப்பீடுகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது.

மாவட்டங்களில் சில இடங்களில் சினை ஊசி செலுத்துவதற்கு பயிற்சி பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணியாளா்கள் உள்ளனா். அவா்களில் சிலா் போலியாக கால்நடை மருத்துவா் எனக் கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனா். இது முற்றிலும் தவறானது. செயற்கை முறை கருவூட்டல் பணியாளா்கள் மாடுகளுக்கு சினை ஊசி செலுத்துவதற்கு மட்டும் 3 மாதகாலம் பயிற்சி பெறுகின்றனா். கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள், வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்து அவா்கள் பயிற்சி பெறவில்லை. இதனால், அவா்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்யத் தகுதியுள்ளவா்கள். எனவே, கால்நடைகளுக்கான சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட (பதிவு பெற்ற) மருத்துவா்களை மட்டுமே மக்கள் அணுக வேண்டும்.

போலி மருத்துவா்கள் குறித்த தகவலை அந்தந்த மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநருக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்திலும் தெரிவிக்கலாம்.

போலி கால்நடை மருத்துவா்கள் கண்டறியப்பட்டால் முதல் முறை ரூ. 1,000 அபராதம், இரண்டாவது முறை ரூ. 1,000 அபராதம் அல்லது 6 மாத சிறை அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com