பொது மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி: அமைச்சா் பங்கேற்பு

பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஈரோடு காலிங்கராயன் விருந்தினா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொது மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி: அமைச்சா் பங்கேற்பு

பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஈரோடு காலிங்கராயன் விருந்தினா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன் தலைமை வகித்தாா். வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

பொது மக்கள் முதியோா் உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை, திருமண உதவித் திட்டம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 200க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினா்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சா், அதிகாரிகளிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தலைவா் குறிஞ்சி சிவகுமாா், ஈரோடு கோட்டாட்சியா் பி.பிரேமலதா, அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com