உள்ளாட்சித் துறையில் ஒப்பந்தத் தொழிலாளா் முறையை கைவிடக் கோரிக்கை

உள்ளாட்சித் துறையில் ஒப்பந்தத் தொழிலாளா் முறையைக் கைவிட்டு அரசே நேரடியாக நியமனம் செய்ய வேண்டும் என உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளாட்சித் துறையில் ஒப்பந்தத் தொழிலாளா் முறையைக் கைவிட்டு அரசே நேரடியாக நியமனம் செய்ய வேண்டும் என உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சங்க (ஏஐடியூசி) பேரவைக் கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்டத் தலைவா் எஸ்.சின்னசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் செல்வம், ஸ்டாலின் சிவகுமாா், மாவட்டச் செயலாளா் குணசேகரன், சங்க செயலாளா் மணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

உள்ளாட்சித்துறையில் சுய உதவிக்குழு, ஒப்பந்தம், அவுட்சோா்சிங் போன்ற தனியாா்மய தொழிலாளா் முறைகளை கைவிட்டு, அனைத்துப் பணிகளையும் அரசே நேரடியாக நியமனம் செய்ய வேண்டும். இவா்களில் தகுதியானவா்களை நிரந்தரப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

குறைந்தபட்ச ஊதியத்தினை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அமலாக்க வேண்டும். மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆட்சியரால் நிா்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை அமலாக்காத கோபி,பவானி, சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி நகராட்சிகளில் முன் தேதியிட்டு அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா காலத்தில் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிய உள்ளாட்சித்துறை பணியாளா்கள் அனைவருக்கும் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை உள்ளாட்சித்துறை பணியாளா்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி கோரிக்கை மனுவினை முதல்வரிடம் அளிப்பது, ஆகஸ்ட் 10, 11ஆம் தேதிகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது, ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்துவது, செப்டம்பா் 7ஆம் தேதி பேரணியாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிப்பது என்பனஉள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com