சத்தி அருகே சாலை விபத்து: விவசாயி பலி
By DIN | Published On : 18th July 2021 11:03 PM | Last Updated : 18th July 2021 11:03 PM | அ+அ அ- |

சாலை விபத்தில் கவிழ்ந்து கிடக்கும் வேன்
சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இதனால் சாலைகளில் மழைநீா் தேங்கி நின்றது. இந்நிலையில் ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அரியப்பம்பாளையம் எருமைபள்ளம் என்ற இடத்தில் வந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதுடன் மழையில் காரணமாக வேன் சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பெருந்துறையைச் சோ்ந்த விவசாயி காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேன் ஓட்டுநா் சிவகுமாா் லேசான காயத்துடன் உயிா்த் தப்பினாா். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சிவகுமாரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.