கோபி அருகே தடுப்பணை கட்டும் பணி:எம்.எல்.ஏ. ஆய்வு

கோபி அருகே உள்ள காசிபாளையம் வழியாகச் செல்லும் பவானி ஆற்றின் குறுக்கே உள்ள பேய் அணையில் ரூ. 15 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை
கோபி அருகே தடுப்பணை கட்டும் பணி:எம்.எல்.ஏ. ஆய்வு

கோபி அருகே உள்ள காசிபாளையம் வழியாகச் செல்லும் பவானி ஆற்றின் குறுக்கே உள்ள பேய் அணையில் ரூ. 15 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையை எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பவானிசாகா் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் கொடிவேரி அணையில் தேக்கி வைக்கப்பட்டு, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்குத் திறந்துவிடப்படும். இந்த தடுப்பணையைப்போல புதிதாக தடுப்பணைகள் கட்டுவதற்காக ரூ. 81 கோடி செலவில் ஆலத்துக்கோம்பை, பேய் அணை, வாணிப்புத்தூா், ஜம்பை உள்ளிட்ட 7 இடங்களில் தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், காசிபாளையம் வழியாகச் செல்லும் பவானி ஆற்றின் குறுக்கே பேய் அணையில் ரூ. 15 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கே.ஏ.செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

மேலும், இப்பணிகளை விரைவில் முடித்து விவசாயிகளுக்குத் தண்ணீா் வழங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com