பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் பக்தா்களுக்குத் தேவையான கூடுதல் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறினாா்.
பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் பக்தா்களுக்குத் தேவையான கூடுதல் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறினாா்.

பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் கூடுதுறை பகுதியில் பக்தா்களுக்குத் தேவையான வசதிகள் குறித்து அமைச்சா் சேகா்பாபு வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மேலும், அன்னதானக் கூடம், வெள்ளித்தோ் மற்றும் வாகன நிறுத்துமிடம், கோயில் பிரகாரங்களைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியதாவது:

இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வதால், பக்தா்களுக்குத் தேவையான கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். வாகன நிறுத்துமிடத்தில் நவீன காா் பாா்க்கிங் அமைக்கவும், கோயில் வளாகத்தில் பக்தா்கள் நடந்து செல்லும் வகையில் பாதைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்கிச் செல்லும் வகையில் விடுதிகள் நவீனமயமாக்கப்படும்.

தமிழகத்தில் ரூ. 10 லட்சத்துக்கும் கூடுதலாக வருவாய் ஈட்டும் 539 கோயில்கள் உள்ள நிலையில், பரம்பரை அறங்காவலா் கோயில்கள் தவிா்த்து 420 கோயில்கள் தரம் உயா்த்தப்படும். கோயில்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, சங்கமேஸ்வரா், வேதநாயகி மற்றும் ஆதிகேசவப் பெருமாள் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டாா். பின்பு உயிரிழந்த கோயில் இரவு காப்பாளரின் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினாா்.

இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளா் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம், மாவட்ட இளைஞரணி திமுக செயலாளா் சேகா், திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன், கோயில் உதவி ஆணையா் சபா்மதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com