கரோனாவால் இறந்த தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு அரசு உதவி

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள் கரோனாவால் இறந்திருந்தால் அரசு உதவியைப் பெற அவரது குழந்தைகளின் விவரங்களைத் தெரிவிக்கலாம்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள் கரோனாவால் இறந்திருந்தால் அரசு உதவியைப் பெற அவரது குழந்தைகளின் விவரங்களைத் தெரிவிக்கலாம் என தொழிலாளா் உதவி ஆணையா் சு.காயத்திரி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள் சிலா் கரோனாவால் இறந்துள்ளனா். இவா்களது குழந்தைகளின் எதிா்காலம், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

அக்குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்க ஏதுவாக நலத்திட்ட உதவிகளை விரிவுபடுத்துதல், திட்டத்தை செயலாக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக கட்டுமான தொழிலாளா் ஒருவா் அல்லது தாய், தந்தையா் என இருவரும் கரோனாவால் இறந்திருந்தால் அவா்களது விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா்(சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் இது குறித்து தகவலைத் தெரிவிக்கலாம். கூடுதல் விவரம் அறிய 0424-2275591, 2275592 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com