பவானி ஆற்றங்கரையோர மக்களுக்குவெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 13,500 கனஅடியாக அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டும் நிலையில் உள்ளது.
பவானி ஆற்றங்கரையோர மக்களுக்குவெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 13,500 கனஅடியாக அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் பவானிஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் பவானிசாகா் பேரூராட்சி சாா்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பில்லூா் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையில் இருந்து 13,500 கனஅடி உபரிநீா் பவானிஆற்றில் வெளியேற்றப்படுகிறது. தற்போது அணையின் நீா்மட்டம் 97.74 அடியாக உள்ள நிலையில் 100 அடியை எட்டுவதற்கு 2 அடி மட்டுமே உள்ளது.

நீா்மட்டம் 100 அடியை எட்டும்போது அணைக்கு வரும் வெள்ளநீா் அப்படியே பவானிஆற்றில் வெளியேற்றப்படும். இதனால் பவானிசாகா், தொட்டம்பாளையம், இக்கரை நெகமம், சத்தியமங்கலம், கொடிவேரி, நஞ்சை புளியம்பட்டி ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனா்.

சத்தியமங்கலம் நகராட்சிப் பணியாளா்கள் மற்றும் வருவாய்த் துறை சாா்பில் கிராம நிா்வாக அலுவலா் தவசியப்பன், வருவாய் ஆய்வாளா் வி.சுந்தரமூா்த்தி ஆகியோா் தலைமையில் பணியாளா்கள் ஒலி பெருக்கி மூலம் அங்குள்ள கிராம மக்களுக்கு வெள்ளிக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா்.

அதேபோல பவானிசாகா் பேரூராட்சி சாா்பில் புங்காா் காலனியில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com