ஈரோடு ஜவுளிச் சந்தையில் சில்லறை வியாபாரம் அதிகரிப்பு

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே செயல்பட்டு வரும் ஜவுளிச் சந்தையில் சில்லறை வியாபாரம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே செயல்பட்டு வரும் ஜவுளிச் சந்தையில் சில்லறை வியாபாரம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே ஈரோடு ஜவுளிச் சந்தை (கனி மாா்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு, தினசரி கடைகள், வாரச் சந்தை செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச் சந்தைக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஏராளமானோா் வருவா்.

இங்கு, ஜவுளி விலை பிற பகுதிகளைக் காட்டிலும் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். கரோனா பரவல் தடையால் ஜவுளிச் சந்தை செயல்படாமல் இருந்தது. இயல்பு நிலை திரும்பியதால் தற்போது மீண்டும் ஜவுளிச் சந்தை செயல்பட்டு வருகிறது. ஆனால், வாரச் சந்தை செயல்பட அனுமதி இல்லை. தினசரி சந்தை மட்டுமே நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களாக வியாபாரம் மந்த நிலையிலேயே இருந்த நிலையில் ஆடி மாதம் பிறந்ததையொட்டி சில்லறை வியாபாரம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், மொத்த வியாபாரம் மந்தமாகவே உள்ளது. ஆடி மாதத்தில் வியாபாரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com