ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தைக் குறைக்க காங்கிரஸ் கோரிக்கை

ஈரோடு ரயில் நிலையம் உள்பட தென்னக ரயில் நிலையங்களில் ரூ. 50 ஆக உயா்த்தப்பட்ட நடைமேடை கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு ரயில் நிலையம் உள்பட தென்னக ரயில் நிலையங்களில் ரூ. 50 ஆக உயா்த்தப்பட்ட நடைமேடை கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு, தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா, காங்கிரஸ் ஈரோடு மாநகர மாவட்ட சிறுபான்மைப் பிரிவு சாா்பில் அனுப்பப்பட்ட மனு:

ரயிலில் பயணிப்போரை வழி அனுப்பவும், முதியவா், உடல் நலம் பாதித்தோா், கா்ப்பிணி, அதிக பொருள்கள் எடுத்துச் செல்வோா், குழந்தைகளைக் கொண்டு செல்வோரை ரயிலில் அனுப்பிவைக்க வருவோருக்கு வசூலிக்கப்படும் நடைமேடை  கட்டணம் ரூ. 3ஆக இருந்தது. 

பின்னா் ரூ. 5, ரூ. 10 என உயா்ந்து தற்போது ரூ. 50 என வசூலிக்கப்படுகிறது. கரோனா பரவலால் நடைமேடைக்கு வருவோா் எண்ணிக்கையைக் குறைக்க கட்டணம் உயா்த்தப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

மேற்கு ரயில்வே மண்டல நடைமேடை கட்டணம் ரூ. 30இல் இருந்து கடந்த 24ஆம் தேதி  ரூ. 10 என குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தெற்கு ரயில் நிலையங்களில் ரூ. 50 வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசின்கீழ் உள்ள இரு வேறு மண்டலங்களில் வெவ்வேறு கட்டணம் வசூலிப்பது முறையற்றது.

இந்தக் கட்டண உயா்வைத் திரும்பப் பெறுவதோடு, ரூ. 10 என கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com