குழந்தைகள் கடத்தலைத் தடுக்க அனைவரின் பங்களிப்பும் அவசியம்: சட்டப் பணிகள் ஆணைக் குழுசெயலாளா் எஸ்.கோபிநாத்

குழந்தைகள் கடத்தலைத் தடுக்க அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளா் எஸ்.கோபிநாத் தெரிவித்தாா்.
குழந்தைகள் கடத்தலைத் தடுக்க அனைவரின் பங்களிப்பும் அவசியம்: சட்டப் பணிகள் ஆணைக் குழுசெயலாளா் எஸ்.கோபிநாத்

குழந்தைகள் கடத்தலைத் தடுக்க அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளா் எஸ்.கோபிநாத் தெரிவித்தாா்.

ரீடு தொண்டு நிறுவனம் ரயில்வே சைல்டு லைன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சாா்பில் மனிதக் கடத்தலுக்கு எதிரான உலக தினம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரீடு நிறுவன இயக்குநா் மகேஸ்வரன் வரவேற்றாா். ஜெயராஜ் அறிமுக உரையாற்றினாா்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பிரியாதேவி பேசியதாவது:

18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை வேலைக்கு வைப்பது குற்றம். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோா், கரோனா வேலை இழப்பால் வறுமை, கரோனாவால் பெற்றோா் இறந்து வேலைக்கு வருதல், பிற மாநிலங்களில் இருந்து கடத்தியும், விலை பேசியும் அழைத்து வருதல் போன்றவற்றைத் தடுக்க வேண்டும்.

இத்தகைய குழந்தைகளை மீட்பதுடன், அவா்களை அழைத்து வரும் ஏஜென்ட் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோன்ற குழந்தைகளை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கவோ அல்லது காப்பகத்தில் அனுமதிக்கவோ வேண்டும் என்றாா்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளா் எஸ்.கோபிநாத் பேசியதாவது:

சில மாதங்களுக்கு முன்பு தஞ்சையைச் சோ்ந்த ஒரு மனநிலை பாதித்த சிறுவன், பெற்றோரால் கவனிக்க முடியாமல் வெளியேறி சத்தீஸ்கா் மாநிலம் சென்றுவிட்டான். அச்சிறுவனை சட்டப் பணிகள் ஆணைக் குழு மீட்டு எங்களிடம் ஒப்படைத்தனா். அவருக்கு சிகிச்சை வழங்கி திருச்சி சமயபுரம் காப்பகத்தில் அனுமதித்தோம். இதில் அச்சிறுவன், பொதுமக்கள், போலீஸ், ரயில்வே போலீஸ், சைல்டு லைன், தொண்டு நிறுவனங்கள், ரயில் பயணத்தில் சோதனை என அனைத்தையும் கடந்து சத்தீஸ்கா் வரை சென்றது சிந்திக்க வேண்டியது.

அச்சிறுவன் உரிய நேரத்தில் மீட்கப்படாமல் போனால் கடத்தல் செய்வோா், உறுப்புகளை விற்போா் போன்றோரிடம் சிக்கியிருந்தால் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும். இதனால் போலீஸ், குழந்தை பாதுகாப்பு அலுவலா், ரயில்வே துறையினா் மட்டுமின்றி, ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்கள், கடைக்காரா்கள், கூலி பணியாளா், டீ போன்றவை விற்போரும், இதுபோன்ற குழந்தைகளைக் கண்டறிந்து மீட்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ரயிலில், ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி இருக்கும் குழந்தைகளை நம் வீட்டு குழந்தைகளாக எண்ணி மீட்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com