பவானி அருகே உள்ள மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 22.50 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இங்கு வெள்ளை எள் கிலோ ரூ. 86.99 முதல் ரூ. 104.12 வரையும், கருப்பு எள் ரூ. 84.29 முதல் ரூ. 106.69 வரையும் ஏலம் போயின. மொத்தம் 331 முட்டைகள் 247.68 குவிண்டால் எடையுள்ள எள் ரூ. 22,50,166க்கு விற்பனையாயின.