கரோனா: 95 உடல்களை அடக்கம் செய்த தமுமுக

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த 95 பேரின் உடல்களை தமுமுகவினா் அடக்கம் செய்துள்ளதுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த 95 பேரின் உடல்களை தமுமுகவினா் அடக்கம் செய்துள்ளதுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் தினமும் ஏராளமானோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுவரை 65,000க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், இதுவரை 400க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 25 நாள்களில் கரோனாவால் உயிரிழந்த 95 பேரின் உடல்களை தமுமுகவினா் அடக்கம் செய்துள்ளனா்.

இது குறித்து அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்டத் தலைவா் சித்திக் கூறியதாவது:

கரோனா தொற்றால் இறந்தவா்கள் எந்த மதத்தினராக இருந்தாலும், அந்த மத வழக்கத்தின் அடிப்படையிலேயே நல்லடக்கம் செய்து இருக்கிறோம். மேலும், பொதுமக்களை கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் விதமாக விழிப்புணா்வுப் பிரசாரங்கள், கபசுர குடிநீா் வழங்குவது, இலவசமாக முகக் கவசம் வழங்குவது, தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பது, தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்துவது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகிறோம்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் சுவாசிக்க சிரமப்படும் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 4 வாகனங்கள் இலவசமாக இயங்கப்படுகின்றன. இந்த வாகனம் தேவைப்படுவோா் 9003377786 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

கடந்த வாரம் கரோனாவால் ஒரு மூதாட்டி இறந்துவிட்டாா். அவரது உடலை வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு அவருடைய மகன் சென்றுவிட்டாா். இதைத் தொடா்ந்து, இறந்த மூதாட்டியின் உறவினா்கள் எங்களை அணுகி உடலை நல்லடக்கம் செய்ய கோரினா். அதன்பேரில் நாங்கள் அங்கு சென்று, அரசு நெறிமுறைகளைப் பின்பற்றி மூதாட்டியின் உடலை அடக்கம் செய்தோம்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கும், கரோனாவால் உயிரிழந்தவா்களை நல்லடக்கம் செய்வதற்கும் மாவட்டம் முழுவதும் இரவு, பகல் பாராமல் பணி செய்வதற்காக ஈரோடு மாவட்டத்தை கிழக்கு, மேற்கு என 2 குழுக்களாகப் பிரித்து குழுவுக்கு 15 போ் வீதம் செயல்பட்டு வருகிறோம். தமுமுக சாா்பில் தமிழகம் முழுவதும் இதுவரை 4,000க்கும் மேற்பட்டோரை நல்லடக்கம் செய்திருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com