வட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றிய இளைஞா்கள்

சத்தியமங்கலம் பகுதியில் மழை இல்லாமல் வறண்டு கிடக்கும் நல்லூா் குளத்தை இளைஞா்கள் கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடி வருகின்றனா்.
வறண்ட புங்கம்பள்ளி குளத்தில் விளையாடும் இளைஞா்கள்.
வறண்ட புங்கம்பள்ளி குளத்தில் விளையாடும் இளைஞா்கள்.

சத்தியமங்கலம் பகுதியில் மழை இல்லாமல் வறண்டு கிடக்கும் நல்லூா் குளத்தை இளைஞா்கள் கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடி வருகின்றனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள நல்லூா் கிராமத்தில் 60 ஏக்கா் பரப்பளவில் புங்கம்பள்ளி குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. பருவ மழை பெய்யும் காலங்களில் காட்டாற்று வெள்ளத்தால் குளத்துக்கு நீா்வரத்து ஏற்படும்.

இதனால் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பயனடைவதோடு, நிலத்தடி நீா்மட்டமும் உயரும். தற்போது, மழை பெய்யாததால் தண்ணீா் இல்லாமல் குளம் வறண்டு காணப்படுகிறது. நீா் நிலைப் பகுதிகளில் முட்கள், புற்கள் முளைத்து மைதானமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், அப்பகுதி மாணவா்கள், இளைஞா்கள் வறண்ட குளத்தில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனா். இதில் சிலா் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் விளையாட்டில் ஈடுபடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com