சத்தியமங்கலம்: ஒரு மாதத்திற்குப் பின் பத்திரப்பதிவு அலுவலகம் மீண்டும் திறப்பு

சத்தியமங்கலத்தில் ஒரு மாத்திற்குப் பின் பத்திரப்பதிவு அலுவலகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
பத்திரப்பதிவு அலுவலகம்.
பத்திரப்பதிவு அலுவலகம்.

சத்தியமங்கலத்தில் ஒரு மாத்திற்குப் பின் பத்திரப்பதிவு அலுவலகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் கரானா தொற்று வேகமாக பரவி வருவதால் நோய் தொற்றை கட்டுப்படுத்தவதற்கு கடந்த 10ஆம் தேதி பொதுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிலிருந்து பத்திரப்பதிவு அலுவலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் அரசு அலுவலங்கள் செயல்பட தடைவிதிக்கப்பட்டது. 

தற்போது 30 சதவீத அலுவலர்களுடன் அரசு அலுவலங்கள் திறக்கப்படலாம் என அரசின் உத்திரவையடுத்து ஒரு மாதத்திற்குப் பிறகு இன்று சத்தியமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகம் திறக்கப்பட்டது. 

பத்திரம் பதிவு செய்ய வரும் மக்கள் சமூக இடைவெளியே கடைப்பிடிக்க அலுவலக வளாகத்தில் தனி வட்டமிடப்பட்டுள்ளது. முகக்கசவம் அணிந்து வருவோருக்கு சானிடைசர் அளித்து கைகளை சுத்தம் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பத்திரம் பதிவு செய்ய ஒருவர் கூட வராத நிலையில் அலுவலர்கள் வேலையின்றி காத்திருக்கின்றனர். 

பத்திரப்பதிவு எழுதும் டாக்மெண்ட ரைட்டர் அலுவலகம் திறக்கக்கூடாது என அரசின் கட்டுபாடு காரணமாக பத்திரம் தயார் செய்ய எழுத்தர்கள் இல்லாத காரணத்தால் பதிவு செய்ய பொதுமக்கள் முன்வரவில்லை என்பதே முக்கிய காரணமாக தெரிவித்தனர். 

பத்திரப் பதிவு திறக்கப்பட்டாலும் மக்கள் வராமல் வெறிச்சோடிக் காணப்பபடுகிறது. டாக்குமெண்ட் எழுத்தர்கள் செயல்பட அனுமதியளித்தால் மட்டுமே பதிவுகள் சரியான செய்யப்படும் என எழுத்தர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com