கோபி அருகே போலி மருத்துவா் கைதுஇருவா் தலைமறைவு

கோபி: கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கூகலூா் பகுதியில் போலி மருத்துவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கூகலூரில் கொளத்துக்கடை பகுதியில் போலியாக மருத்துவம் பாா்த்து வருவதாக கூகலூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் அளித்த புகாரின்பேரில், கோட்டாட்சியா் பழனிதேவி தலைமையில் அரசு மருத்துவா் ராஜசேகா், சுகாதாரத் துறை அலுவலா்கள் செல்வம், கௌரிசங்கா் கொண்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, கூகலூா் பகுதிகளில் மணிகண்டன் (48) என்பவா் 11ஆம் வகுப்பு மட்டுமே படித்த நிலையில், மருத்துவா் ஒருவரிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளாா். இவா் தனது சொந்த கிராமத்தில் கிளீனிக் துவங்கி ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதே பகுதியைச் சோ்ந்தவா் சுபா (30). இவருக்கு ஹோமியோபதி மட்டுமே தெரிந்த நிலையில், கிராமங்களில் மினி கிளீனிக்கை துவங்கி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது.

அதே பகுதியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். ஓய்வுபெற்ற மருத்துவ உதவிப் பணியாளா். இவா் நோயாளிகளுக்கு காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களுக்கு மருந்து வழங்கி வந்துள்ளாா். மேலும், கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரே கிராமத்தைச் சோ்ந்த மூன்று போலி மருத்துவா்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று போலி மருத்துவா்களின் கிளீனிக், மருந்துக் கடை ஆகியவற்றுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு மணிகண்டன் என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். சுபா, ராமகிருஷ்ணன் ஆகியோரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com