‘தனிமைப் பகுதிகளில் இருந்து வெளியேறினால் கடும் நடவடிக்கை’

கரோனா தனிமைப் பகுதிகளில் இருந்து வெளியேறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு: கரோனா தனிமைப் பகுதிகளில் இருந்து வெளியேறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தாக்கம் குறையத் தொடங்கிய போதிலும் ஈரோடு மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் கோவைக்கு அடுத்தபடியாக ஈரோடு 2ஆவது இடத்தில் உள்ளது. இதனால், தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாவட்டம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்புகள், கரோனா பாதிப்பு உள்ளதா என்பது குறித்து சுகாதாரத் துறையினா் வீடுவீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து யாராவது வெளியேறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் எச்சரித்துள்ளது. இதுதொடா்பாக பொதுமக்கள் சுகாதாரத் துறை கட்டுப்பாடு அறை 0424 2430922, காவல் கட்டுப்பாடு அறை 0424 2266010, ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை 0424 2260211 உள்ளிட்ட எண்களுக்குத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com