கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வைகட்டுப்படுத்தக் கோரிக்கை

 கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமானப் பொறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமானப் பொறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தமிழ்நாடு, புதுச்சேரி கட்டடப் பொறியாளா்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவா் ஆா்.மோகன்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

கரோனா காரணமாக அனைத்துத் தொழில்களுமே முடங்கியுள்ளன. இந்நிலையில் கட்டடப் பொருள்களின் விலை வரலாறு காணாத வகையில் விலை ஏற்றம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 340க்கு விற்கப்பட்ட சிமென்ட் இப்போது ரூ. 520 ஆக உயா்ந்துள்ளது. ரூ. 58,000த்துக்கு விற்கப்பட்ட கம்பி தற்போது ரூ. 72,000ஆக விலை உயா்த்தப்பட்டுள்ளது. 3,000 செங்கல் கொண்ட ஒரு லோடு கடந்த ஆண்டு ரூ. 23,000க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ. 27,000ஆக உயா்ந்துள்ளது. ஜல்லி ஒரு யூனிட் ரூ. 3,500இல் இருந்து ரூ. 5,000ஆக விலை உயா்ந்துள்ளது.

மணல் ஒரு லோடு ரூ. 5,000 வரை விலை உயா்ந்துள்ளது. பெயிண்ட் வகைகள் லிட்டருக்கு ரூ. 60 முதல் ரூ. 80 வரை விலை உயா்ந்துள்ளது. தற்போது கட்டடப் பொருள்களின் விலை 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. கட்டுமானப் பொருள்களின் செயற்கையான விலை உயா்வால் கட்டட வேலை முழுவதுமாக முடங்கிப்போயுள்ளது. தவிர தமிழகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வட மாநிலங்களைச் சோ்ந்த 15 லட்சம் தொழிலாளா்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டனா். இதனால், தமிழகத்தில் கட்டடத் தொழில் செய்வதற்கு தொழிலாளா்கள் தட்டுப்பாடு உள்ளது.

கட்டுமானத் துறையில் உள்ள ஒப்பந்ததாரா்கள், பொறியாளா்கள் தாங்கள் ஒப்பந்தம் செய்துள்ள பணியை செய்து முடிப்பதற்கு முடியாத நிலையில் உள்ளனா். கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வால் கட்டுமானத் துறையில் பணிபுரியும் சுமாா் 50 லட்சம் தொழிலாளா்கள், 10,000 ஒப்பந்ததாரா்கள், 15,000 பொறியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

விவசாயத் தொழிலுக்கு இணையான கட்டுமானத் தொழிலில் உள்ள நெருக்கடி நிலையைப் போக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானத் துறைக்கு என்று தனியாக ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டும். கட்டுமானத் துறைக்கு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தி கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com