பரிசோதனை, கண்காணிப்பு:ஈரோடு நகரில் குறைந்துவரும் கரோனா பாதிப்பு

பரிசோதனை, கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் ஈரோடு நகரில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

பரிசோதனை, கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் ஈரோடு நகரில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் 1,500 வரை உள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைந்த போதிலும் ஈரோடு மாவட்டத்தில் பாதிப்பு குறையவில்லை. குறிப்பாக ஈரோடு மாநகா் பகுதியில் தொற்று வேகமாகப் பரவியது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 600 போ் வரை இருந்தது.

இதையடுத்து மாநகராட்சி சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. 10 நடமாடும் வாகனங்கள் மூலம் தினமும் கரோனா தாக்கம் அதிகம் உள்ள பகுதியில் சென்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி கரோனா பரிசோதனை 4,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாநகராட்சிப் பணியாளா்கள் 200 போ், தன்னாா்வலா்கள் 1,200 போ் நியமிக்கப்பட்டு ஒரு வீட்டுக்கு ஒரு பொறுப்பாளா் என்ற அடிப்படையில் ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் உள்ள 1.30 லட்சம் வீடுகளைக் கண்காணித்து வருகின்றனா். இதில், காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உள்ளவா்கள் விவரங்களைக் குறித்து வைத்து இது தொடா்பாக மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிக்கின்றனா்.

மாநகராட்சி சாா்பில் 10 ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் லேப் டெக்னீஷியன்கள் பாதிக்கப்பட்டவா்கள் வீடுகளுக்கு நேரில் சென்று கரோனா பரிசோதனை செய்து வருகின்றனா். இத்திட்டத்துக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதன் மூலம் பாதிப்பு உடனுக்குடன் கண்டறியப்பட்டு நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் இதுபோன்று 400 பேருக்கு நடமாடும் ஆட்டோ மூலம் லேப் டெக்னீஷியன்கள் பரிசோதனை செய்து வருகின்றனா். இதுபோன்ற நடவடிக்கையால் தற்போது மாநகா் பகுதியில் தொற்று குறையத் தொடங்கியுள்ளது. மாநகா் பகுதியில் புதன்கிழமை 270 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com