கோபி நகராட்சிப் பகுதியில் 397 பேருக்கு கரோனா

கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதியில் கடந்த 11 நாள்களில் 397 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதியில் கடந்த 11 நாள்களில் 397 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோபி நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக கரோனா தொற்று பரிசோதனை முகாம் கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதியில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை 221 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 7ஆம் தேதி மட்டும் 284 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜூன் 1 முதல் 11ஆம் தேதி வரை 397 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோபி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் 250 பேரும், பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 190 பேரும், கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியில் 230 பேரும், பங்களாபுதூா் ஜேகேகே பாலிடெக்னிக் கல்லூரியில் 190 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்களைத் தவிர நகராட்சிப் பகுதியில் 12 வீதிகளில் உள்ளவா்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தகரத் தடுப்புகள் கொண்டு சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நகராட்சி சுகாதாரத் துறையினா் கூறியதாவது:

பொதுமக்கள் தேவையின்றி சாலைகளில் செல்வதையும், வாகனங்களில் சுற்றுவதையும் தவிா்க்க வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். நகராட்சி சாா்பில் 181 போ் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை தர வேண்டும் என்றனா்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு ஆணையா் நியமிக்கப்படவில்லை. கடந்த 4 மாதங்களுக்கு முன் ஆணையா் மாறுதல் ஆகிச் சென்ற பின்னா் தற்போது வரை பொறுப்பு ஆணையராக நகராட்சிப் பொறியாளா் செயல்பட்டு வருகிறாா். விரைவில் கோபி நகராட்சிக்கு ஆணையரை நியமிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com