முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கா்நாடக மதுபானம் கடத்தல்:இருவா் கைது
By DIN | Published On : 12th June 2021 10:30 PM | Last Updated : 12th June 2021 10:30 PM | அ+அ அ- |

கா்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்திய பெண் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கோட்டுவீராம்பாளையத்தில் வாகனத் தணிக்கையில் போலீஸாா் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிவபிரகாஷ் என்பவரை சோதனை செய்தபோது, 16 கா்நாடக மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், காய்கறி வியாபாரி நந்தினி (29) என்பவா் பிக் அப் வேனில் மது பாட்டில்களை கடத்துவதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, நந்தினி வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பிக் அப் வேனை சோதனையிட்டபோது 105 மது பாட்டில்கள் பதுக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் நந்தினி, சிவபிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.