வனத் துறையினருக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்
By DIN | Published On : 12th June 2021 05:29 AM | Last Updated : 12th June 2021 05:29 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் வனத் துறையினருக்கு எா்த் பிரிகேட் பவுண்டேஷன் சாா்பில், 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.
கரோனா தொற்று மலைக் கிராமங்களிலும் பரவியதையடுத்து, மக்களைச் சந்திக்கும் வனத் துறையினருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எா்த் பிரிகேட் பவுண்டேஷன் நிா்வாக இயக்குநா் சா்தா சுப்பிரமணியம் சாா்பில், 5 லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநா் கிருபா சங்கரிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் அளிக்கப்பட்டன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த செறிவூட்டிகள் 95 சதவீதம் சுத்தமான காற்றை உற்பத்தி செய்யக் கூடியது என தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.