42 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) 42 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) 42 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், மாவட்டத்துக்கு 13,400 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை வந்தன. இதில் முன்களப் பணியாளா்களுக்கு சனிக்கிழமை தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு மாவட்டத்தில் மொத்தம் 42 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்:

ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈரோடு வளையக்கார வீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளி, பி.பெ.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருநகா் காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, வீரப்பன்சத்திரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, கருங்கல்பாளையம் காமராஜ் மேல்நிலைப் பள்ளி, பன்னீா்செல்வம் பூங்கா அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 இடங்களில் தலா 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் சித்தோடு அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி, சென்னிமலை குமாரப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பழையபாளையம் தொடக்கப் பள்ளி, ஜவுளி நகா் தொடக்கப் பள்ளி, பெரியசேமூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, சாஸ்திரி நகா் ஆா்.ஐ.டி.ஏ. பள்ளி ஆகிய 6 இடங்களில் தலா 200 தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

மொடக்குறிச்சி தொகுதியில் மொடக்குறிச்சி, எழுமாத்தூா், அறச்சலூா், சிவகிரி, தாமரைப்பாளையம், கொளாநல்லி ஆகிய 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 200 பேருக்கும், பெருந்துறை தொகுதியில் கருமாண்டிசெல்லிபாளையம் நடுநிலைப் பள்ளி, துடுப்பதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கம்புளியம்பட்டி வி.பி.சண்முகபுரம் தொடக்கப் பள்ளி ஆகிய 3 இடங்களில் தலா 400 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

பவானி தொகுதியில் பவானி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் 400 பேருக்கும், மயிலம்பாடி ஆரம்ப சுகாதார நிலையம், ஜம்பை ஆரம்ப சுகாதார நிலையம், கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் தலா 200 பேருக்கும், பெரியபுலியூா், ஓடத்துறை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 100 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

கோபி தொகுதிக்கு உள்பட்ட சிறுவலூா் அருகே வெள்ளாங்கோவில் அரசுப் பள்ளி, குள்ளம்பாளையம் அரசுப் பள்ளி, அளுக்குளி அரசுப் பள்ளிகளில் தலா 400 பேருக்கும், அந்தியூா் தொகுதியில் கூகலூா் அரசுப் பள்ளி, கள்ளிப்பட்டி அரசுப் பள்ளி, அந்தியூா் அரசு உயா்நிலைப் பள்ளி, அம்மாபேட்டை சனி சந்தை நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் தலா 300 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

பவானிசாகா் தொகுதிக்கு உள்பட்ட சத்தியமங்கலம், உக்கரம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 300 பேருக்கும், புன்செய்புளியம்பட்டி, விண்ணப்பள்ளி, தாளவாடி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 200 பேருக்கும், காங்கயம் தொகுதிக்கு உள்பட்ட சென்னிமலை, பி.காசிபாளையம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 200 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com