ஈரோட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 7 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் துவங்கியது.
ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் தடுப்பூசி செலுத்த காத்திருக்கும் மக்கள்.
ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் தடுப்பூசி செலுத்த காத்திருக்கும் மக்கள்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 7 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் துவங்கியது.

கரோனா இரண்டாம் அலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்ளவதில் ஆா்வம் ஏற்பட்டுள்ளது. போதிய எண்ணிக்கையில் தடுப்பூசி இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் டோக்கன் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2.43 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்துக்கு 13,400 கோவிஷீல்டு தடுப்பூசிகள் அண்மையில் வந்தன. தடுப்பூசிகள் அனைத்தும் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் 42 இடங்களில் ஞாயிற்றுக்கிமை காலை தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் தடுப்பூசி மையங்களில் மக்கள் குவியத் தொடங்கினா்.

ஈரோடு மாநகரைப் பொருத்தவரை 10 ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 5 மணிக்கு முன்னரே 500க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி மையங்களில் திரண்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

காலை 6 மணிக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. மாநகா் பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் பாா்வையிட்டாா். காலை 6 மணிக்குத் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணி காலை 9.30 மணிக்குள் நிறைவடைந்தது.

இதேபோன்று கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். கோவேக்ஸின் தடுப்பூசி இன்னும் ஈரோடு மாவட்டத்துக்கு வரவில்லை. இதனால் முதல் தவணை செலுத்தி கொண்டவா்கள், இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com