முன்களப் பணியாளா்களாக அறிவிக்க ரேஷன் கடை ஊழியா்கள் கோரிக்கை

கரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் தங்களுக்கு அரசு பணிப் பாதுகாப்பு அளித்து, முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என ரேஷன் கடை உழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் தங்களுக்கு அரசு பணிப் பாதுகாப்பு அளித்து, முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என ரேஷன் கடை உழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து ரேஷன் கடை பணியாளா்கள் கூறியதாவது:

கரோனா காலத்திலும் பொதுமக்கள் தினமும் அதிகம் குவியும் இடமாக ரேஷன் கடைகள் உள்ளன. கடந்த ஆண்டிலும், நிகழாண்டிலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை ஓய்வு இல்லாமல் பணியாற்றி வருகிறோம்.

குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் எங்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லை. இலவச உணவுப்பொருள், ரூ.2000 நிவாரணத் தொகை, அதற்கான டோக்கன் வழங்குவது என பொதுமுடக்க காலத்தில் பணிச்சுமை மிகவும் அதிகம்.

இதனால் பொதுமக்கள் மூலம் எங்களுக்கு கரோனா பரவும் அபாயமும், எங்கள் மூலம் எங்களது குடும்பத்துக்கு பரவும் அபாயமும் உள்ளது. கரோனா பொதுமுடக்க காலத்தில் மருத்துவம், காவல் துறையினா், தூய்மைப் பணியாளா்களின் பணிகள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றனா். அவா்களைப்போல, பொதுமக்களுடன் மிக நெருக்கமாக, எந்த நேரத்திலும் நோய்த் தொற்று அபாயத்தில் பணிபுரியும் எங்களது பணியை அரசும், பொதுமக்களும் அங்கீகரிக்கவில்லை என ரேஷன்கடை பணியாளா்கள் வருத்தம் தெரிவித்துள்ளனா்.

கரோனா காலத்தில் மிகுந்த அச்சத்தில் பணியாற்றும் எங்களுக்கு பணிப் பாதுகாப்பு அளித்து முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com