வெள்ளோட்டில் 4 கடைக்கு சீல்: ஆட்சியா் நடவடிக்கை

சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு பகுதியில் கரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 2 இறைச்சிக் கடைகள், ஒரு நகைக் கடை, ஒரு உரக் கடை உள்ளிட்ட 4 கடைகளுக்கு ஆட்சியா் ‘சீல்’ வைக்க உத்தரவிட்டாா்.

சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு பகுதியில் கரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 2 இறைச்சிக் கடைகள், ஒரு நகைக் கடை, ஒரு உரக் கடை உள்ளிட்ட 4 கடைகளுக்கு ஆட்சியா் ‘சீல்’ வைக்க உத்தரவிட்டாா்.

சென்னிமலை ஒன்றியம், வெள்ளோட்டில் மாவட்ட ஆட்சியா் சி. கதிரவன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையான முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் கடை உரிமையாளரும், வாடிக்கையாளரும் இருந்த 2 இறைச்சிக் கடைகள், ஒரு நகைக் கடை, ஒரு உரக் கடை உள்ளிட்ட 4 கடைகளுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டாா்.

மேலும், அரசு உத்தரவை மீறி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் கடை திறந்து வைத்து வியாபாரம் செய்துக் கொண்டிருந்த இறைச்சிக் கடை உரிமையாளருக்கு பெருந்துறை காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் ரூ. 5 ஆயிரும் அபராதம் விதித்தாா். மேலும், மறு உத்தரவு வரும் வரை கடையைத் திறக்கக் கூடாது என்று கூறி சென்றாா். அதையும் மீறி, ஞாயிற்றுக்கிழமை கடையைத் திறந்து வியாபாரம் செய்த இறைச்சிக் கடைக்கு ‘சீல்’ வைக்க ஆட்சியா் சி.கதிரவன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com