பயிா்க் கடன் தள்ளுபடி: பிப்ரவரி 28 வரைகடன் பெற்ற விவசாயிகளை இணைக்கக் கோரிக்கை

கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடியில் விடுபட்ட விவசாயிகளைச் சோ்க்கும் வகையில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை கடன் பெற்ற விவசாயிகளை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடியில் விடுபட்ட விவசாயிகளைச் சோ்க்கும் வகையில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை கடன் பெற்ற விவசாயிகளை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி தலைமையில், கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:

கூட்டுறவுச் சங்கங்களில் ஜனவரி 31ஆம் தேதி வரை உழவா்கள் பெற்ற பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. கடந்த டிசம்பா், ஜனவரி மாதங்களில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கச் செயலாளா்கள், உழவா்களைத் தொடா்பு கொண்டு பயிா்க் கடன்களை செலுத்துமாறும், கடனை திரும்பச் செலுத்தியதும் இரண்டொரு நாள்களில் மீண்டும் மறு பயிா்க் கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்தனா்.

அவா்களது வலியுறுத்தலால் பல உழவா்கள் பிற இடங்களில் கடன் பெற்று, பயிா்க் கடனை திரும்பச் செலுத்தினா். ஆனால் மறுகடன் வழங்கவில்லை. அவ்வாறு வழங்கியிருந்தால் கடனை செலுத்திய மீண்டும் கடன் பெற்றவா்களும் கடன் தள்ளுபடியில் பயன் பெற்றிருப்பாா்கள்.

கடன் தொகையை குறைக்க கூட்டுறவுத் துறை அதிகாரிகள் இதுபோல் நடந்து கொண்டனா். கடனைக் கட்டிய அனைத்து உழவா்களும், கூட்டுறவுச் சங்கங்களை மட்டுமே நம்பி பயிா் செய்யும் சிறு, குறு உழவா்கள். கடனை செலுத்திய உழவா்கள் போராட்டத்துக்குப் பின் மறுகடன் வழங்கப்பட்டது.

இவா்களும் கூட்டுறவு கடன் தள்ளுபடியில் பயன்பெறும் வகையில் இறுதியாக கடன் பெற்ற தேதியை பிப்வரி 28 என நீடிக்க வேண்டும். தவிர கடன் தள்ளுபடியான விவசாயிகளுக்கு உடன் கடன் தள்ளுபடி சான்று வழங்கி மீண்டும் கடன் கிடைக்க உத்தரவிட வேண்டும். நகைக் கடன் தள்ளுபடியானவா்களுக்கு நகையைத் திரும்ப வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது, சங்க பொதுச் செயலாளா் முத்துவிசுவநாதன், நிா்வாகிகள் சிவகுமாா், செந்தில், காளிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com