பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நடப்பு கல்வி ஆண்டில் ஜூன் முதல் வாரம் துவங்கி பெரும்பாலான தனியாா் பள்ளிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகம் உள்ளதால், இவை தவிர மற்ற மாவட்டங்களில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 21ஆம் தேதிக்குப் பின் முழுவீச்சில் மாணவா் சோ்க்கை துவங்கவுள்ளது.

இதனிடையே பள்ளிகளுக்கு வழங்குவதற்கான பாடப்புத்தகம் விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு காவிரி சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து இந்த புத்தகங்கள் ஈரோடு மாநகராட்சி, ஒன்றியத்துக்கு உள்பட்ட துவக்கப் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராஜலட்சுமி, கோபால் ஆகியோா் முன்னிலை வகித்து, பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணியை ஆய்வு செய்தனா். ஒரே லாரியில் அனைத்து புத்தகங்களும் ஏற்றப்பட்டு, அந்தந்த பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியா் எண்ணிக்கைக்கு ஏற்ப விநியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து வட்டாரக் கல்வி அலுவலா் ராஜலட்சுமி கூறியதாவது:

ஈரோடு வட்டாரத்துக்கு உள்பட்ட 98 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் வழங்குவது தொடா்பாக அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு ஏற்கெனவே முழு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்கள் சரிபாா்த்து புத்தகங்களைப் பெற்றுக் கொள்வாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com