ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள்
By DIN | Published On : 19th June 2021 02:14 AM | Last Updated : 19th June 2021 02:14 AM | அ+அ அ- |

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கவுந்தப்பாடி ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 14 ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டா்கள், மருத்துவ உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
கவுந்தப்பாடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ரோட்டரி மாவட்ட ஆளுநா் எம்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 14 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 6 ஆக்சிஜன் சிலிண்டா்கள், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவிகள் 20, மருத்துவ உபகரணங்கள் ஆகியன கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை, ஓடத்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வெங்கடேஸ்வரா கல்லூரி, கவுந்தப்பாடி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கவுந்தப்பாடி ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.மருதாசலம், செயலாளா் ஒய்.விவேகானந்தன், திட்ட இயக்குநா் ரகுகுமாா், தலைவா் பி.ஏ.என்.விஸ்வநாதன், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.