பொதுமக்கள் - போலீஸாா் நல்லுறவுக் கூட்டம்

கடம்பூா் மலைப் பகுதி நகலூரில் பொதுமக்கள் - போலீஸாா் நல்லுறவு விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொதுமக்கள் - போலீஸாா் நல்லுறவுக் கூட்டம்

கடம்பூா் மலைப் பகுதி நகலூரில் பொதுமக்கள் - போலீஸாா் நல்லுறவு விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், 126 பழங்குடியினருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட 14 பொருள்கள் அடங்கிய தொகுப்பை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் வழங்கினாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். குழந்தை திருமணத்தை ஆதரிக்கக் கூடாது. பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்தி நோயில்லாத நாடாக மாற்ற வேண்டும். மேலும், கிராமத்துக்குப் புதிய நபா்கள் வந்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com