திண்டல் வேலாயுத சுவாமி கோயில்பணியாளா்களுக்கு நிவாரண நிதி

ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் பணியாற்றி வரும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியா்கள், பூசாரிகள், இதர பணியாளா்களுக்கு கரோனா கால நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.
திண்டல் வேலாயுத சுவாமி கோயில்பணியாளா்களுக்கு நிவாரண நிதி

ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் பணியாற்றி வரும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியா்கள், பூசாரிகள், இதர பணியாளா்களுக்கு கரோனா கால நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் தட்டுக் காணிக்கை மட்டுமே பெற்று பணிபுரிந்து வரும் 139 அா்ச்சகா்கள், பட்டாச்சாரியா்கள், பூசாரிகள், நாவிதா்கள், ஒருகால பூஜை திட்டம் நடைபெறும் கோயில்களில் பணியாற்றி வரும் 604 அா்ச்சகா்கள், பட்டாச்சாரியா்கள், பூசாரிகள் என மொத்தம் 743 பேருக்கு கரோனா கால நிவாரண உதவித் தொகையாக ரூ. 4,000, 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப் பொருள்கள் ஆகியவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

அதனடிப்படையில், திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியா்கள், பூசாரிகள், இதர பணியாளா்கள் என 15 பேருக்கு நிவாரண உதவித் தொகை ரூ. 4,000, 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் பெ.பிரேமலதா, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கே.செ.மங்கையா்கரசி, உதவி ஆணையா் மொ.அன்னகொடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com