அரசுப் பணியாளா்களுக்குகரோனா தடுப்புப் பொருள்கள்
By DIN | Published On : 29th June 2021 04:49 AM | Last Updated : 29th June 2021 04:49 AM | அ+அ அ- |

பெருந்துறை: இந்திய ரெட் கிராஸ் சங்கம் பெருந்துறை கிளை சாா்பில், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு சோப்பு, இயற்கை மூலிகைப் பொடிகள், முகக் கவசங்கள் ஆகியவை திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
பெருந்துறை காவல் நிலையம், போக்குவரத்துக் காவல் நிலையத்தில் பணிபுரியும், காவலா்களுக்கும் சோப்பு, கிரிமிநாசினி, முகக் கவசம் வழங்கப்பட்டது.
அதேபோல, பெருந்துறை அமைதிப் பூங்கா நவீன எரிவாயு மயானத்தில் பணிபுரிந்து வரும் பணியாளா்களுக்கும் சங்கத்தின் சாா்பில், கிருமி நாசினி, முகக் கவசங்கள், சோப்புகள் வழங்கப்பட்டன.
இந்திய ரெட் கிராஸ் சங்கம், பெருந்துறை கிளைத் தலைவா் பல்லவி பரமசிவன், செயலாளா் ஜெயபிரகாஷ் நாராயணன், பிரைடு ஜேசீஸ் தலைவா் மோகன்குமாா் ஆகியோா் அரசுப் பணியாளா்களுக்குப் பொருள்களை வழங்கினா்.