வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது
By DIN | Published On : 10th March 2021 05:39 AM | Last Updated : 10th March 2021 05:39 AM | அ+அ அ- |

கடம்பூா் மலைப் பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதி இருட்டிபாளையம் மலைக் கிராமத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளா்ப்பதாக கடம்பூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடம்பூா் போலீஸாா் இருட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது இருட்டிபாளையம் அருகே உள்ள போகிபாளையம் தொட்டி பகுதியைச் சோ்ந்த தவசி (33) என்பவா் தனது வீட்டின் பின்புறம் 20க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை வளா்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்த போலீஸாா் தவசியைக் கைது செய்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.